வங்கிகளில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் டொலரின் பெறுமதி!
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
Exchange Rate
People's Bank
By Kathirpriya
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபாய் 311.42 முதல் ருபாய் 312. 39 வரையும் மற்றும் ரூபாய் 326.74 முதல் ரூபாய் 327.76 வரையும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 309.78 முதல் ரூபாய் 312.75 ஆகவும், விற்பனைப் பெறுமதி ரூபாய் 325 முதல் ரூபாய் 328 ஆகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல் சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபாய் 313 முதல் ரூபாய் 316 மற்றும் ரூபாய் 325 முதல் ரூபாய் 328 ஆகவும் அதிகரித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி