டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 22 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 328 ரூபா 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 04 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 401 ரூபா 73 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333 ரூபா 35 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 348 ரூபா 30 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 40 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 45 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 00 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 211 ரூபா 47 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 25 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 91 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
20கோடி ரூபா நட்டம் : கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் : லக்ஷ்மன் கிரியெல்ல
வர்த்தக வங்கிகளில்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
நேற்றைய தினத்துடன் (04) ஒப்பிடுகையில் இன்று (05) டொலரின் பெறுமதி நிலையாகவுள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.18 ரூபாயாகவும் விற்பனைப் 329.37 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.68 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.