டொலரின் பெறுமதி திடீரென சரிவு : இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04) நாணயமாற்று விகிதங்களை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 10 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 328 ரூபா 91 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 01 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 398 ரூபா 69 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனடா டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபா 32 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 346 ரூபா 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 241 ரூபா 47 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 77 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 209 ரூபா 27 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 10 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 240 ரூபா 88 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வர்த்தக வங்கிகளில்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப்பெருமாதிகளை வெளியிட்டுள்ளன.
நேற்றைய தினத்துடன் (03) ஒப்பிடுகையில் இன்று (04) டொலரின் பெறுமதியை ஒரு தளம்பல் நிலை காணப்படுகிறது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.42 ரூபாவிலிருந்து 316.18ரூபாயாகவும் விற்பனைப் 329.62 ரூபாவிலிருந்து 329.37 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.71 ரூபாவிலிருந்து 317.68 ரூபாயாக அதிகரித்துள்ளவேளை விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாக மாறாமலுள்ளது.
அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.