டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணயமாற்று வீதம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினமும் (25) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 315.56 ரூபாய் மற்றும் 330.38 ரூபாய் ஆக மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315. 70 ரூபாய் முதல் 314.73 ரூபாயாக குறைவடைந்துள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 328 ரூபாயாக மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே 317 ரூபாய் மற்றும் 328 ரூபாய் ஆக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேலிங் பவுண்
இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 80 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 63 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபா 60 சதம் - விற்பனை பெறுமதி 416 ரூபா 57 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 341 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 357 ரூபா 46 சதம்.
விற்பனை பெறுமதி
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 21 சதம் - விற்பனை பெறுமதி 244 ரூபா 02 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 12 சதம் - விற்பனை பெறுமதி 213 ரூபா 32 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 82 சதம் - விற்பனை பெறுமதி 244 ரூபா 46 சதம்