டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்றுவீதம்
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதிகள் வெளியாகியுள்ளன.
அதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (25) இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக காணப்படுகின்றது.
அதனடிப்படையில் மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 330.13 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொள்முதல் பெறுமதி
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.20 ரூபாயிலிருந்து 318.18, ரூபாயாக அதிகரித்துள்ள வேளை, விற்பனைப் பெறுமதி 328.50 ரூபாயாக மாறாமலுள்ளது.
அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாய் மற்றும் 328 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 73 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 77 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 389 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 405 ரூபா 36 சதம்.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 337 ரூபா 85 சதம் - விற்பனை பெறுமதி 353 ரூபா 03 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 90 சதம் - விற்பனைப் பெறுமதி 245 ரூபா 94 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 02 சதம் - விற்பனைப் பெறுமதி 213 ரூபா 80 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 10 சதம் - விற்பனைப் பெறுமதி 242 ரூபா 87 சதம்.


