வங்கிகளில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் டொலரின் பெறுமதி
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
Exchange Rate
People's Bank
By Kathirpriya
சிறிலங்காவின் வங்கிகளில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (25) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதிகரித்த டொலரின் பெறுமதி

அதன்படி, மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபாய் 318.72 தொடக்கம் ரூபாய் 321.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி ரூபாய் 334.40 தொடக்கம் ரூபாய் 336.95 ஆகவும் காணப்படுகின்றது.
மேலும் வர்த்தக வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 320.67 முதல் ரூபாய் 322.65 வரையும், விற்பனை விலை ரூபாய் 332 முதல் ரூபாய் 334 வரையும் அதிகரித்துள்ளது.
இதேபோல், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதிகள் முறையே ரூபாய் 322 முதல் ரூபாய் 323 வரையும் மற்றும் ரூபாய் 335 முதல் ரூபாய் 326 வரையும் உயர்வடைந்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி