டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(15.02.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (15)நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 318.06 ரூபாவாகவும், கொள்வனவு விலை 308.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 236.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 226.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 342.90 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 329.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 401.30 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர்
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 17சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 15சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 19 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 45சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |