அமெரிக்கா டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!
இன்றைய நாளுக்கான நாணயமற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியின் அறிக்கையின்படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் 288.06 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்றையதினம் 291.96 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, அதன் விற்பனை பெறுமதி 305.11 ரூபாவிலிருந்து 309.23 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றையதினம் 288.02 ரூபாவாக பதிவாகி இருந்ததுடன், இன்றையதினம் 294.94 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேசமயத்தில், அதன் விற்பனை பெறுமதியானது 310 ரூபாவாக காணப்படுகிறது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், கொள்முதல் பெறுமதி 295 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 310 ரூபாவாகவும் மாற்றமடைந்துள்ளது.
