உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் மைத்திரி தரப்பு நடுநிலை
SLFP
Maithripala Sirisena
By Vanan
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடுநிலைக் கொள்கையை கடைப்பிடிக்கும் என முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த நாடாளுமன்ற பிரேரணையானது நாட்டின் தேசிய பொருளாதாரம் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் குறிப்பிடத்தக்க சாதகமான பங்களிப்பை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மாற்று வழி
அதில் மேலும் விவாதிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் மட்டுமே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு தரப்பினரும் இந்தப் பிரேரணையை விமர்சித்தால் அதற்கு மாற்று வழியை முன்வைக்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
