கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவை: வெளியான தகவல்!
கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO) வடக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றை யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் நேற்று (25) நடத்தியுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பயண நேரம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு சுற்றுலாத்துறை குறித்தும், குறிப்பாக உள்வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் நாம் முழுமையான வெற்றியடைவதற்குச் சில சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கின்றது.
பலாலி விமான நிலையம் மற்றும் இந்தியாவுடனான கடல்வழிச் சேவைகள் விரிவடைந்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது.

ஆயினும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நீண்ட பயண நேரம் சுற்றுலாவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே, கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்திருக்கின்றோம்.
அத்துடன், மாகாணத்துக்குள் சுற்றுலாவிகள் வசதியாகப் பயணிக்கக்கூடிய வீதிப் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் உருவாக்கப்படுவது அவசியமாகும” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14