ரிஷி சுனக்கின் ஆட்டம் ஆரம்பம் - துணைப்பிரதமராக டொமினிக் ராப் நியமனம்
புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார்.
இதன்படி பிரித்தானிய துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தவர்.
இதேவேளை முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் அமைச்சரவையில் இருந்த பலரை பதவி விலகுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார்.
அதிரடி நடவடிக்கைகள்
புதிய பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே அதிரடி நடவடிக்கைகள் எடுக்க தொடங்கியுள்ளார்.
அதன்படி, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அலோக் சர்மா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்தின் நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் நீடிக்கிறார்.நாதிம் ஜஹாவிக்கு புதிதாக அமைச்சரவையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவருக்கான துறை ஒதுக்கப்படவில்லை. பென் வாலஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜேம்ஸ் கிலெவர் வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற கருவூலத்தின் செயலாளராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர் நியமனம்
Victoria Prentis MP @VictoriaPrentis has been appointed Attorney General @attorneygeneral. #Reshuffle pic.twitter.com/AL9kQgesMZ
— UK Prime Minister (@10DowningStreet) October 25, 2022
இதேவேளை சட்டமா அதிபராக விக்டோரியா ப்ரெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்