அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது
Donald Trump
United States of America
By Sumithiran
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
2016 ஆம் ஆண்டில் வயது வந்தோருக்கான திரைப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியமை தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதேவேளை, டிரம்ப் கைது செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக கைரேகைகள் பதிவு செய்யப்படுவதுடன், அவரை புகைப்படம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைவிலங்கிடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை எனவும், அவர் தொடர்ந்து சட்ட அமுலாக்கப் பாதுகாப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி