25 ஆண்டுகளுக்கு பின் ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலை
25 ஆண்டுகளுக்கு பின், அமெரிக்க பணக்காரர்களைக் கொண்ட பட்டியிலிலிருந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) நீக்கி ஃபோர்ப்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து ளெியான செய்தியில், அண்மைய காலமாக அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளதால் ட்ரம்பினுடைய பெயரை நீக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஓராண்டுக்கு முன்பிருந்த அதே சொத்து மதிப்பை ட்ரம்ப் தற்போது கொண்டுள்ளார். அத்துடன், கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததிலிருந்து அவரின் சொத்து மதிப்பு 600 மில்லியன் டொலர்கள் குறைந்துள்ளது.
ட்ரம்பின் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிக்கிடப்பட்டுள்ளது. 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவாக உள்ளதால் அவரால் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற முடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் 339 ஆவது இடத்தில் இருந்த ட்ரம்புக்கு, இம்முறை அந்தப் பட்டியிலினுள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.