அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜோ பைடன்! டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனம்
"அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஜோ பைடன்" என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோ பைடனை மாத்திரமல்லாமல் கமலா ஹரிசையும் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ஜில் பைடனும் வெள்ளை மாளிகையில், துணை அதிபர் கமலா ஹரிஸுடன் மகளிர் வரலாற்று மாத வரவேற்பை நடத்தினர்.
மொத்த பேரழிவு
அப்போது, 'நம்ப முடியாத பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்று துணைத்தலைவர் கமலா ஹரிஸ்' என ஜோ பைடன் கூறினார்.
இந்த நிலையில், ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கருத்துத் தெரிவிக்கையில், ''பைடன் நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அதிபர் மற்றும் அவருக்கு ஒரு துணை அதிபர் இருக்கிறார். அவர் ஒரு மொத்த பேரழிவு.
பதவி விலகுமாறு
ஜோ பைடன் குழப்பதைக் கொண்டிருக்கிறார் மற்றும் அவரே ஒரு குழப்பம் தான், வரலாற்றில் இதுபோன்ற மோசமான அணி இருந்ததில்லை. உண்மையில், கமலா ஹரிஸ் அவரை விட குறைவான பிரபலம்'' என்றார்.
வொஷிங்டனில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், கமலா ஹரிஸின் செயற்பாடுகளை மறைமுகமாக புகார் செய்கிறார்கள். ஆனால், அவர் வரலாற்றில் முதல் கறுப்பின துணை அதிபர் என்பதால், பகிரங்கமாக அவரை விமர்சிக்க தயங்குகிறார்கள்.
அதேபோல் அரசியல் விமர்சகர்கள், கமலா ஹரிஸை பதவியில் இருந்து விலகுமாறு கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |