படுகொலைகள் இடம்பெறும்...எதுவும் மிஞ்சாது : ஈரானை பகிரங்கமாக எச்சரித்த ட்ரம்ப்

Donald Trump United States of America Iran World War III
By Raghav Jun 13, 2025 04:02 PM GMT
Report

அமெரிக்காவுடன் (United States) ஈரான் (Iran) அணுசக்தி ஒப்பந்தம் செய்துக்கொள்ளா விட்டால் தாக்குதலால் நிலைமை மோசமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இஸ்ரேல், ஈரான் இடையே நேரடி போர் வெடித்து இருக்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது. 

இதற்காக ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் எச்சரித்து வந்த நிலையில் தற்போது, ஈரானின் முக்கியமான அணு ஆராய்ச்சி கூடங்கள், அன்டர் கிரவுன்ட் யுரேனியம் செறிவூட்டல் மையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள், ராணுவ தளங்களை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பழிவாங்கும் படலம்..! மரண பயம் காட்டும் ஈரான் - இஸ்ரேலில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ஈரான் தலைவர்கள்

இந்நிலையில், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு ஈரானுக்கு மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

படுகொலைகள் இடம்பெறும்...எதுவும் மிஞ்சாது : ஈரானை பகிரங்கமாக எச்சரித்த ட்ரம்ப் | Donald Trump Warns Iran Israel Strikes

இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை, “ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு கொடுத்தேன். நான் அவர்களிடம், அதைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். 

ஆனால் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

ஒப்பந்தம் செய்யாவிட்டால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ உபகரணங்களை அமெரிக்கா தயாரிக்கிறது. மேலும் இஸ்ரேலிடம் ஆயுதங்கள் நிறைய உள்ளது.

அச்சத்தில் உற்று நோக்கும் உலக நாடுகள்: ஈரானில் புதிய தளபதிகளை நியமித்த உச்ச தலைவர்

அச்சத்தில் உற்று நோக்கும் உலக நாடுகள்: ஈரானில் புதிய தளபதிகளை நியமித்த உச்ச தலைவர்

அணு ஆயுத ஒப்பந்தம் 

அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியும். சில ஈரான் தலைவர்கள் துணிச்சலுடன் பேசினார்கள், ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 


அவர்கள் அனைவரும் இப்போது இறந்துவிட்டார்கள். எங்களுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும்.ஏற்கனவே பெரிய மரணமும், அழிவும் நடந்துள்ளது.

ஆனால் அடுத்த திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவையாக இருப்பதால், இந்தப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் நேரம் இருக்கிறது. 

அணு ஆயுத ஒப்பந்தங்கள் போட வேண்டும். இதனை செய்தால் தாக்குதல்கள் மற்றும் மரணங்கள் நிகழாது”என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

நெதன்யாகுவிடம் இருந்து மோடிக்கு பறந்த அவசர அழைப்பு

நெதன்யாகுவிடம் இருந்து மோடிக்கு பறந்த அவசர அழைப்பு

கலக்கத்தில் சர்வதேசம்: சிறிலங்கா எயார்லைன்ஸின் உருக்கமான பதிவு

கலக்கத்தில் சர்வதேசம்: சிறிலங்கா எயார்லைன்ஸின் உருக்கமான பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்