நியூஸிலாந்து வீரரால் சமன் செய்யப்பட்ட டோனியின் ஒருநாள் போட்டி சாதனை!
MS Dhoni
Cricket
Indian Cricket Team
New Zealand Cricket Team
International Cricket Council
By Pakirathan
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை 12 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.
குறித்த போட்டியில் இந்தியா அணி நிர்ணயித்த 349 ஓட்டங்களை துரத்திய நியூஸிலாந்து அணி 337 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில், நியூஸிலாந்து அணியின் மைக்கல் ப்றேஸ்வெல் 140 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது சர்வதேச சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
சமன் செய்த சாதனை
ப்றேஸ்வெல்த் பெற்ற குறித்த சதத்தின் மூலம், சர்வதேசப் போட்டியொன்றில் 7 ஆவது இலக்கத்தில் களமிறங்கி இரண்டு சதங்களை அடித்த வீரராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் மகேந்திர சிங் டோனியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி