பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
வரட்சியான காலநிலையினால் கால்நடை இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வரட்சியான காலநிலையுடன் விஷம் கலந்து விலங்குகளை வேட்டையாட சிலர் தூண்டப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான இறைச்சியை உண்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த வரண்ட காலநிலையினால் வனவிலங்குகளுக்கு குடிப்பதற்கு, குறிப்பாக வில்பத்து, யால, உடவலவ போன்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் மற்றும் காடுகளில் குடிப்பதற்கு மிகக் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது.சிறிய இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இந்த வன விலங்குகளுக்கு விஷம் கலந்து, தீ வைத்து கொல்லப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பாக மாத்தறை, அம்பாந்தோட்டை, புத்தளம், அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அயல் பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த படுகொலை செய்யப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சி சிறந்த இறைச்சியாக விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக இந்த வகையான விஷத்தை வைத்து கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்டால், நீங்கள் உடனடியாக இறந்துவிடலாம்.
மேலும் சில உடல் உபாதைகள் ஏற்படலாம். மற்றும் நீண்டகால கோளாறுகள் ஏற்படலாம்.
எனவே, தெரியாத பகுதிகளுக்குச் செல்வதையும், இறைச்சி உண்பதையும் மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.