புத்தாண்டுகால பயணம் - பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
police
people
facebook
newyear
tearup
By Sumithiran
எதிர்வரும் தமிழ்,சிங்கள புத்தாண்டின் போது சமூக வலைத்தளங்களில் தமது பயணங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றவாளிகள் தகவல்களை எடுத்துக்கொண்டு சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இதுபோன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் சேர்ப்பதால் குற்றச்செயல்களில் பலியாக நேரிடும் என்றும் அவர் கூறினார்.
எனவே, இவ்விடயத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி