நவக்கிரகங்களை வழிபடுவதில் குழப்பமா?

By Beulah Jul 09, 2023 07:42 AM GMT
Report

விஷ்ணு, சிவன், பிரம்மா, பிள்ளையார், முருகன், இலக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி தேவி என்று பல பெயர்களில் பல உருவங்களைக் கொண்டு வழிபாடு செய்தாலும் இறைவன் ஒருவனே. மனிதர்கள் தன்னுடைய கர்மாவால் துன்புறும் நிலைக்கு தள்ளப்படும்போது இறுதியாக சரணடைவது இறைவனைத்தான்.

முக்காலங்களையும் உணர்ந்திருப்பவர் இறைவன் என்றாலும் முன்னெச்சரிக்கையாக தங்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள ஜோதிடத்தையும் கணித்து தெரிந்துகொள்கிறார்கள்.

பூர்வ புண்ணிய பலன்களுக்கேற்ப நவக்கிரகங்கள் ஜாதகத்தில் சாதகமாகவோ அல்லது ஒரு வித தோஷம் கொண்டோ அமைந்திருக்கிறது.

அத்தகைய தோஷத்தை நீக்கும் பொருட்டு நவக்கிரகங்களை வணங்கி அதற்கான பூஜைகளையும், வழிபாடுகளையும் செய்து நிம்மதியைத் தேடுகிறார்கள்.

நவக்கிரக பரிகாரங்களைச் செய்யும் அனைவருக்கும் நவக்கிரகங்களை வழிபடுவதிலும் அதைச் சரியாகச் சுற்றுவதிலும் பொதுவான சந்தேகம் உண்டு.

பொது விதி

நவக்கிரகங்களை வழிபடுவதில் குழப்பமா? | Dos And Don Ts Of Worshipping Navagrahas In Temple

சிவாலயங்களில் அமைந்திருக்கும் நவக்கிரகங்களை வழிபடுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரையும், மூலவரையும் தாயாரையும் தரிசித்த பிறகு இறுதியாக நவக்கிரகங்களைத் தரிசிக்க வேண்டும் என்பதே பொதுவான விதி.

பிரகாரத்தை மூன்று முறை வலம் வருபவர்கள் நவக்கிரக சந்நிதிக்குள் வரும்போது எத்தனை சுற்றுகளை எப்படிச் சுற்ற வேண்டும் என்ற குழப்பத்துக்கு உள்ளாவார்கள்.

சிலர் கிரகத்துக்கு ஒன்று என்று 9 சுற்றுகளைச் சுற்றுவார்கள்.சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுகின்றன.

ராகு, கேது இரண்டும் வலமிருந்து இடமாக சுற்றுகின்றன.

அதனால் நவக்கிரகங்களைச் சுற்றும் போது 7 சுற்றுகளை வலமாகவும், எஞ்சிய 2 சுற்றுகளை இடமாகவும் சுற்றவேண்டும் என்றும் சொல்வார்கள்.

ஆனால் நவக்கிரகங்களில் இடம், வலம் என்பது கிடையாது என்பதால் அதைக் குறித்துப் பார்க்க வேண்டியதில்லை. பொதுவாக 9 சுற்று சுற்றினால் போதும்.

பரிகாரத்துக்குரிய நவக்கிரகம்

நவக்கிரகங்களை வழிபடுவதில் குழப்பமா? | Dos And Don Ts Of Worshipping Navagrahas In Temple

நவக்கிரகங்களைப் பொதுவாக சுற்றியபிறகு பரிகாரத்துக்குரிய நவக்கிரகத்துக்கு மட்டும் அந்த கிரகத்துக்குரிய மந்திரங்களைச் சொல்லியபடி அதற்குரிய சுற்றுகளை அதிகரித்து வணங்கினால் போதும்.

வியாழன் - 3 சுற்றுகள், ராகு- 4 சுற்றுகள், புதன் -5 சுற்றுகள், சுக்கிரன் - 6 சுற்றுகள், சனி- 8 சுற்றுகள், கேது, செவ்வாய்-9 சுற்றுகள், சூரியனுக்கு 10 சுற்றுகள், சந்திரனுக்கு 11 சுற்றுகள் சுற்றினால் வேண்டுதலுக்குரிய நவக்கிரகங்கள் நன்மை தரும்.

நவக்கிரகங்களை வழிபடும் போது நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது.  என்பதுடன் அதைத் தொட்டு வணங்கவும் கூடாது என்பது ஐதிகம்.

இனி நவக்கிரகங்களைச் சுற்றும்போது குழப்பமடையாதீர்கள். தோஷங்களை நிவர்த்தி செய்ய பிரார்த்தனை மட்டும் செய்யுங்கள். நன்மைகள் தேடி வருவதை உணர்வீர்கள்.  

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025