அமைச்சர் டக்ளஸ் அளித்துள்ள உறுதிமொழி
மீனவர்களை பாதிக்கும் எந்தவொரு தீர்மானங்களையும் எட்டப்போவதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தேசிய கடற்தொழில் பொதுச் சம்மேளனத்தின் மாதாந்த பணிப்பாளர் சபைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்கின்ற அத்துமீறல்களை தடுப்பதற்கு தான் எடுக்கும் முயற்சிகளின் போது தனக்கு எதிராக சுமத்தப்படுகின்ற பிழையான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
மீனவர்களை பாதுகாப்பதற்கு எடுக்கப்படக் கூடிய எந்தவொரு தீர்மானங்களின் போதும் அதற்கென குரல் கொடுப்பதாகவும் தம்மீது சுமத்தப்படுகின்ற போலிக் குற்றச்சாட்டுக்கள் எருமை மாட்டின் மீது மழை பொழிவது போன்று கருதுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.
கடற்தொழில் பொதுச் சம்மேளனத்தின் பிரதம செயலாளர் நெல்சன் எதிரிசிங்க உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.