வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு

Indian fishermen Douglas Devananda M K Stalin Tamil nadu Sri Lanka Fisherman
By Jaso Jan 16, 2025 04:39 PM GMT
Report

  இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி கடற்றொழிலாளர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(douglas devananda) குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்(stalin) தலைமையில் இடம்பெற்ற அயலவர்கள் நிகழ்வில் பங்கேற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் பேசாமை தொடர்பில் அவரிடம் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றார்கள். குறித்த நிகழ்வில் இலங்கையிலிருந்து (sri lanka)சென்ற சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்பி எடுத்தமை சமூக ஊடகங்களில் வெளியாகியது. இலங்கை இந்திய கடற்றொழிலாளர் விவகாரம் பல வருடங்களாக பேசுபொருளாக இருக்கின்ற நிலையில் எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு தமிழக முதல்வரிடம் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு பேசியதாக தெரியவில்லை.

கடன் செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி

கடன் செலுத்த முடியாமல் தவிப்பவர்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி

வடபகுதி கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் நாடகம்

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழக முதல்வருடன் கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்தானது வடபகுதி கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் ஒரு நாடகமாக நான் கருதுகிறேன்.

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு | Douglas Accuses Politicians Deceive Fishermen

தமிழ்நாட்டில் தமிழக முதல்வரின் அருகில் அமர்ந்திருக்கும் போது கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசி இருக்கலாம். அல்லது குறித்த நிகழ்வு முடிவடைந்த பின் தமிழக ஊடகங்களுக்கு இந்த கடற்றொழிலாளர்கள் விவகாரத்தில் உண்மைத் தன்மையை தொடர்பில் தெரியப்படுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

அநுர அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

அநுர அரசாங்கத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்

சந்தர்ப்பம் பார்த்து சாதித்தேன்

நான் கடற்தொழில் அமைச்சராக இருந்தபோது இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டுகின்ற பிரச்சினை தொடர்பில் இரு நட்டுகடற்றொழிலாளர்களையும் அழைத்து தமிழ்நாட்டில் பேசுவதற்காக தமிழக தலைவர்களுடன் பேசினேன். நேரில் பேசுவதற்கு நேரம் தருவதாக கூறினார்கள் துரதிஷ்டம் அதிகாரம் தற்போது என்னிடம் இல்லை. நான் தற்போது அதிகாரத்திலிருந்து குறித்த நிகழ்வுக்கு தமிழ்நாடு சென்று இருந்தால் தமிழக முதலமைச்சருடன் பேசி இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் அழைப்பது தொடர்பில் முடிவு எடுத்திருப்பேன்.

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு | Douglas Accuses Politicians Deceive Fishermen

இதையே நான் கூறுகிறேன் என்றால் எனது அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்காக பல விடயங்களை சந்தர்ப்பம் பார்த்து பலவற்றை சாதித்திருக்கிறேன். உதாரணமாக கூற வேண்டுமானால் அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் பேசி சம்மதத்தை பெற்றேன்.

ஒருவேளை அறிவியல் நகர் பல்கலைக்கழகத்தை விடுவிப்பது தொடர்பில் பேசுவதற்கு நேரம் கேட்டிருந்தால் ஒரு வேளை அது நடைபெறாமல் போயிருக்கும். இது போன்ற பல உதாரணங்களை என்னால் குறிப்பிட முடியும்

பொருட்களின் விலை உயர்வுக்கு இதுவும் காரணமா...!

பொருட்களின் விலை உயர்வுக்கு இதுவும் காரணமா...!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு

இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை அழிவு பாதைக்கு கொண்டு சென்றதும் அவர்களின் சுயலாப அரசியலுக்காக. போர் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்ற நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை அதற்கான பல சந்தர்ப்பங்கள் இருந்த போதும் அதனை தமிழ் அரசியல் தலைமைகள் பயன்படுத்தவில்லை. இப்போது இந்தியா கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய விவகாரம் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனையும் தமிழ் அரசியல்வதிகள் தமது சுயலாப அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றார்கள்.

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு | Douglas Accuses Politicians Deceive Fishermen

நான் அமைச்சராக இருந்தபோது வாருங்கள் இந்தியா சென்று கடற்றொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் பேசுவோம் என்றேன் ஒரு சிலரை தவிர ஏனையவர்கள் மறுத்து விட்டார்கள். தேர்தலின் போது நான் பல ஆசனங்களை கேட்கவில்லை சில ஆசனங்களை எனக்கு தாருங்கள் மக்களின் அரசியல் அன்றாட பிரச்சனை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை தீர்த்து வைக்கிறேன் என வெளிப்படையாகவே கூறி வந்தேன். ஆனால் மக்கள் ஏதோ ஒன்றை நம்பி வாக்களித்து தற்போது ஏமாற்றம் அடையும் நிலையை எதிர்நோக்கி உள்ளனர் .

சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தை கையில் எடுத்தால் இந்தியா தம்மை பகைத்து விடும் மக்கள் என்ன துன்பத்தை அனுபவித்தாலும் பரவாயில்லை தமது இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற நினைப்புடன் பயணிக்கிறார்கள்.

ஆபத்தின் விளிம்பில் பதுளை மாவட்டம் :விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஆபத்தின் விளிம்பில் பதுளை மாவட்டம் :விடுக்கப்பட்ட எச்சரிக்கை

புதிய கடற்தொழில் அமைச்சரும் பேசவில்லை

புதிய கடற்தொழில் அமைச்சரும் தமிழ்நாட்டில இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நிலையில் அவரும் தமிழக முதலமைச்சருடன் பேசவில்லை. முதலமைச்சருடன் பேசாதது ஒருபுறம் இருக்க அந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் வெளியில் காத்திருந்த தமிழக ஊடகங்களுக்கு முன்னால் தமிழக எல்லை தாண்டிய கடற்றொழிலாளர்களால் எமது வடபகுதி மீனவர்கள் படும் துன்பத்தை எடுத்து கூறி இருக்கலாம் அவ்வாறு கூறவில்லை.

வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்ற முயலும் அரசியல்வாதிகள் : டக்ளஸ் குற்றச்சாட்டு | Douglas Accuses Politicians Deceive Fishermen

ஆகவே கடற்றொழிலாளர்களான மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் என அவர் மேலும் தெரிவித்தார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023