டக்ளஸ் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹர சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முதலில் சிறைச்சாலை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு
இந்த நிலையில், மஹர சிறைச்சாலையில் முன்னாள் அமைச்சருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி, பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவரிடம் இருந்த கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்படி, எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |