ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறையின் முடிவு : மாவைக்கு டக்ளஸ் இரங்கல்

Douglas Devananda Mavai Senathirajah Sri Lanka
By Raghav Feb 01, 2025 01:39 PM GMT
Report

மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார். 

உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் உயிரிழந்திருந்தார்.

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல் யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் : ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி

வடக்கில் இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் : ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி

ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறை

இந்நிலையில் இன்றையதினம் (01.02.2025) அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் நினைவு பகிர்ந்தனர்.

ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறையின் முடிவு : மாவைக்கு டக்ளஸ் இரங்கல் | Douglas Condolences Mavai Senathirajah

கடந்த கால ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறை முடிவிற்கு வந்துள்ளது என அஞ்சலி செலுத்தியபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம், "மூத்த அரசியல் போராளியான அண்ணன் மாவை சேனாதிராசாவின் மறைவு, ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறையின் முடிவாக அமைந்துள்ளது.

மேலும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக 60 ஆம் ஆண்டுகளிலேயே தீவிரமாக செயற்பட்டவர்.

தண்டனைகளுக்கு பயந்து ஒன்றிணைந்த கும்பல்: யாழில் ஜனாதிபதி அநுர பகிரங்கம்

தண்டனைகளுக்கு பயந்து ஒன்றிணைந்த கும்பல்: யாழில் ஜனாதிபதி அநுர பகிரங்கம்

ஆயுதப் போராட்டம்

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், அதற்கான நியாயத்தினை புரிந்து கொண்டவராக போராட்ட இயக்கங்களுடன் உறவுகளை பேணி ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர், சூழல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு நாம் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்ட காலங்களிலும் அவருக்கும் எமக்கும் இடையில் புரிந்தணர்வு பேணப்பட்டு வந்தது.

ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறையின் முடிவு : மாவைக்கு டக்ளஸ் இரங்கல் | Douglas Condolences Mavai Senathirajah

எனினும், கால ஓட்டத்தில் அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி சுவீகரித்துக் கொண்ட நிலைப்பாடுகள், எமக்கும் அவருக்கும் இடையில் கருத்தியல் வேற்றுமைகளை ஏற்படுத்திய போதிலும், பரஸ்பர புரிதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அந்த வகையில் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு தலைமுறை முடிவிற்கு வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுகிழமை (02/02/2025,) நாளை பிற்பகல் 3 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் சமயக்கிரியைகள் இடம்பெற்று மாவிட்டபுரம் - தச்சன்காட்டு இந்து மாயனத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வாக்கெண்ணும் நிலையங்களில் கமராக்கள் அவசியம் : முக்கிய தமிழ்க் கட்சி விடுத்த கோரிக்கை!

வாக்கெண்ணும் நிலையங்களில் கமராக்கள் அவசியம் : முக்கிய தமிழ்க் கட்சி விடுத்த கோரிக்கை!

வடக்கு - கிழக்கை நோக்கி வரப்போகும் நாமலின் கிராமத்திற்கு கிராமம்

வடக்கு - கிழக்கை நோக்கி வரப்போகும் நாமலின் கிராமத்திற்கு கிராமம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்