பூநகரியில் வளச்சுரண்டல் : டக்ளஸ் செய்தால் பிழை NPP செய்தால் சரியா...
பூநகரி பிரதேச பிரிவில் கிராஞ்சி பொன்னாவெளி கிராம அலுவலகர் பிரிவில் தற்போது மீண்டும் காற்றாடி தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இது வெறுமனவே பேச்சுக்களில் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் 34 காற்றாலை மின்னுற்பத்தி கோபுரங்கள் அமைப்பதற்கான அடையாளப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
204 மெகாவாட் கொள்வனவு கொண்ட 34 காற்றாலை மின்கோபுரங்களை அமைப்பதற்கான நிலங்களும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த பகுதியில் இருக்கக்கூடிய சுண்ணக்கற்களை அகழுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோது வேராவில் கிராஞ்சியைச் சேர்ந்த மக்கள் அந்த அமைச்சரை விரட்டி அடித்த வரலாறுகளும் செயற்பாடுகளும் அந்த மண்ணில் அரங்கேறி இருந்தது.
டக்ளஸ் தேவானந்தா காலப்பகுதியில் அங்கே கனிய அகழ்வுகளை தடுப்பதற்காக ஒன்றிணைந்தவர்களும் இந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என்பது இங்கே நினைவூட்ட வேண்டிய விடயம்.
ஆனால் துரதிஷ்ட வசமாக தற்போது வேரவில், கிராஞ்சி, பொன்னாவெளி ஆகிய கிராமங்களில் அமையப்பெற இருக்கும் இந்த காற்றாலை திட்டத்திற்கு அந்த உறுப்பினர்கள் என்.பி.பி அரசு ஆட்சி பீடம் ஏறிய பிறகு மறைமுகமாக பல நகர்வுகளை நகர்த்துகிறார்கள் என ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |