இந்தியாவில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க முயற்சி
இந்தியாவில் இருந்து சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சரக்கு கப்பல் சேவைகள் முன்னெடுக்கப்படுமாயின், வட மாகாணத்தில் நியாயமான விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சியில் இன்று(3) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் புதிததாக முன்மொழியப்பட்டுள்ள கடற்றொழில் சட்ட திருத்தங்கள் மூலம் வெளிநாட்டவர்களின் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாக வெளியாகும் கருத்துக்களில் உண்மையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் காணொளி மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்ட காரைக்கால் காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவையானது ஆரம்பித்த உடனேயே பயணிகள் வரவின்மையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்
ஜனவரி மாதமளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்