அதிபர் ரணில் மற்றும் பில் கேட்ஸ் இடையே விசேட கலந்துரையாடல்!
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பில்லியனரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில் கேட்ஸ்க்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது துபாயில் நடைபெற்று வரும் COP28 உச்சி மாநாட்டின் போது இன்று (3) இடம்பெற்றுள்ளது.
இருவருக்குமிடையிலான கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடலில் உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்பமண்டல மண்டலத்தில் இலங்கையின் சாத்தியமான தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அதிபர் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி இலங்கையின் பசுமை முயற்சிகள் குறித்து பில் கேட்ஸிடம் அதிபர் விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.@BillGates committed support through the @gatesfoundation, emphasizing agriculture modernization, data systems, and climate expertise. (2/2)#ClimateAction #COP28 #LKA #PMD @COP28_UAE pic.twitter.com/gGLOcqoR69
— President's Media Division of Sri Lanka - PMD (@PMDNewsGov) December 3, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |