சுமந்திரனின் நெகிழ்ச்சி பேச்சு..! மகிழ்ச்சிக் கடலில் டக்ளஸ்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெகிழ்வாக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்று (19) வவுனியாவில் இடம்பெற்ற, அதிபர் அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சுமந்திரனின் பேச்சு
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிபர், பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை.
இன்று நீங்கள் அதிபராகி விட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும். அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்.
டக்ளஸ் தேவானந்தா
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும்.
நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா
