விடுதலை புலிகளின் தலைவரால் முடியாதது இவர்களால் முடியுமா..! அமைச்சர் டக்ளஸ் சவால்

Sri Lankan Tamils Kilinochchi Douglas Devananda
By Laksi Apr 11, 2024 03:52 PM GMT
Report

பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் ஆய்வு சரி என்றால் திட்டம் அசுர வேகத்தில் செயல்படுத்தப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று(11)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்...!

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்...!

பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்விற்கான ஆய்வு பணிக்காக 12 துறை சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு சென்றேன்.

விடுதலை புலிகளின் தலைவரால் முடியாதது இவர்களால் முடியுமா..! அமைச்சர் டக்ளஸ் சவால் | Douglas Limestone Excavation Project Prabhakaran

கட்சி அரசியலுக்காக மது போதையில் நின்ற சிலர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாட விடாமல் எம்மை தடுத்தனர்.

ஆனால் சில ஊடகங்களும் முகநூல் போராளிகளும் போராட்டத்திற்கு அஞ்சி டக்ளஸ் தேவானந்தா மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார் என கூறியதை அவதானித்தேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்னை பல தடவைகள் கொலை செய்வதற்கு முயன்றார் ஆனாலும் முயற்சிகள் தோற்றுப் போயின.

சகோதர படுகொலைகளை செய்து என்னை தன் பக்கம் இழுக்கலாம் என கணக்கு போட்டார் அதுவும் பிழைத்துவிட்டது.

விவசாயிகளின் உழைப்பை சுரண்டிய தனியார் நிறுவனம்! முறையிட்டும் கண்டுகொள்ளாத காவல்துறையினர்

விவசாயிகளின் உழைப்பை சுரண்டிய தனியார் நிறுவனம்! முறையிட்டும் கண்டுகொள்ளாத காவல்துறையினர்

மக்களுக்கான அபிவிருத்தி திட்டம்

அன்றைய காலகட்டங்களில் பிரபாகரனால் முடியாததை சில மது போதையர்கள் செய்து விடலாம் என எண்ணிவிடக் கூடாது.

எழுபத்தைந்து கள்ள வாக்கு போட்ட தலைவரின் அடியாள் கந்துவெட்டி ஜீவன் போராட்டத்திற்கு மதுபானம் வழங்கி சிலரை அழைத்து வந்தார்.

விடுதலை புலிகளின் தலைவரால் முடியாதது இவர்களால் முடியுமா..! அமைச்சர் டக்ளஸ் சவால் | Douglas Limestone Excavation Project Prabhakaran

இவர்களின் ஆட்சியில் என்ன செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் கொரோனா காலத்தில் இரும்புக் கேடர்களை களவாடி விற்றதில் இவருக்கும் பங்கு உள்ளது.

இப்படியான சிலர் பொன்னாவெளியில் செய்த விதண்டாவாத தடைகளை உடைத்துக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன் ஆனால் சில தகவல்கள் எனக்கு கிடைப்பதற்கு தாமதமாகிவிட்டன.

அன்றைக்கு நான் ஒன்றைக் கூறிவந்தேன் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை யாரும் தடுக்க முடியாது மீண்டும் இந்த இடத்துக்கு வருவேன் என கூறி வந்தேன் அது விரைவில் நடக்கும்.

நுங்குக்காக பனை மரம் ஏறிய குடும்பஸ்தருக்கு நடந்த அவலம்!

நுங்குக்காக பனை மரம் ஏறிய குடும்பஸ்தருக்கு நடந்த அவலம்!

அசுர வேகத்தில் திட்டம்

தற்போது குறித்த திட்டம் உரிய முறையில் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுமாயின் அப் பிரதேசத்திற்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும்.

விடுதலை புலிகளின் தலைவரால் முடியாதது இவர்களால் முடியுமா..! அமைச்சர் டக்ளஸ் சவால் | Douglas Limestone Excavation Project Prabhakaran

அகழ்வு இடம்பெறும் பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு திட்டம் இறால் வளர்ப்பு மற்றும் உவர் நீரை நன்னீராக்கும் திட்டம் என்பன  நிறுவனத்தினால் ஏற்படுத்தப்படும் அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பொன்னாவெளி  சுண்ணக்கல் அகழ்வு நேற்று இன்று ஆராயப்பட்ட திட்டம் அல்ல வடக்கு மாகாண சபை காலத்திலும் நல்லாட்சி அரசாங்கத்தின்  காலத்திலும் இதற்கான திட்டங்கள் பேசு பொருளாக இருந்தது.

ஆகவே மக்கள் அபிவிருத்திக்கும் நாட்டு அபிவிருத்திக்குமான திட்டங்களை யாராலும் தடுக்க முடியாததோடு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கைகள் கிடைத்ததும் அசுர வேகத்தில் திட்டம் செயற்படுத்தப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோடியை சந்திக்க இந்தியா செல்கிறார் எலான் மஸ்க்...காரணம் இது தான்!

மோடியை சந்திக்க இந்தியா செல்கிறார் எலான் மஸ்க்...காரணம் இது தான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021