டக்ளஸின் பதிவு உண்மைக்கு புறம்பானது -கொதித்தெழும் சுப்பர் மடம் மீனவர்கள் (படங்கள்)
உண்மைக்கு புறம்பானது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட பதிவு உண்மைக்கு புறம்பானது என சுப்பர்மடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று பிற்பகல் 5:00 மணியளவில் அவர்களது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
மன்னிப்புக் கோரல்
நேற்று முன்தினம் வடமராட்சியிலுள்ள கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் பல சேர்ந்து மீன்பிடி அமைச்சர் கே என் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அலுவலகத்திற்கு சென்று மண்ணெண்ணெய் தட்டுப்பாடு தொடர்பில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்கு சென்றதாகவும் தாம் தமது கோரிக்கைகளை எழுத்து மூலம் வழங்கிவிட்டு வந்ததாகவும் அதனை மீன்பிடி அமைச்சர் தம்மிடம் சுப்பர்மடத்தில் மீனவர்கள் நடாத்திய போராட்டம் தொடர்பில் மன்னிப்புக் கோரியதாக தனது முகநூலில் பதிவிட்டிருந்ததாகவும் அது உண்மைக்கு புறம்பானது என்றும் சுப்பர் மடம் மீனவர்கள் தெரிவித்தனர்.


