பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு இடைவேளைகள்: வெளியான தகவல்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் படி, மாற்றப்பட்டுள்ள பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அசோக டி சில்வா வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பாடசாலை காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் என்றும் இரண்டு இடைவேளை நேரங்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வகுப்பு நேரங்கள்
ஜனவரி முதலாம் திகதி முதல் பாடசாலை நேரம் ஒரு நாளைக்கு 50 நிமிடங்கள் அதிகரிக்கும் என்பதால், மாணவர்களால் அதைத் தாங்க முடியாது, எனவே தினமும் காலை 10.10 மணி முதல் காலை 10.30 மணி வரை மற்றும் மதியம் 12.10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை இரண்டு இடைவேளை நேரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, காலை 7.40 முதல் 8.30 மணி வரை, காலை 8.30-9.20 மணி வரை, காலை 9.20 -10.10 மணி வரை, காலை 10.30 -11.20 மணி வரை, காலை 11.20 முதல் மதியம் 12.10 மணி வரை மற்றும் மதியம் 12.20 -1.10 மணி வரை, பிற்பகல் 1.10-2.00 மணி வரை என வகுப்பு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
