வடக்கில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் : டக்ளஸின் அதிரடி நடவடிக்கை

Douglas Devananda Ranil Wickremesinghe University of Jaffna Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Oct 30, 2023 03:52 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று(30) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் : டக்ளஸின் அதிரடி நடவடிக்கை | Dougles Devananda Speech

''இன்று காலை பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

 மொழிப் பிரச்சினை

கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன். இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில் இருந்து நியமிக்கப்பட்டு இங்கு வருவதாக அறிந்து தான் அதனை உடனடியாக நிறுத்துமாறும், இங்கிருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லியபோது அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

வடக்கில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பில் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் : டக்ளஸின் அதிரடி நடவடிக்கை | Dougles Devananda Speech

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ரணிலின் எதிர்பாராத அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ரணிலின் எதிர்பாராத அறிவிப்பு

அடுத்த கிழமை இவை நடைமுறைக்கு வரும். தற்போது வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு இங்கு மொழிப் பிரச்சினை, தங்குமிட பிரச்சினைகள் இருக்கின்றது, இதனால் அதற்கே அவர்கள் உழைப்பது செலவுக்கே போய்விடும்.

இது ஒரு அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன். கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று நான் இங்கு நடக்க விட மாட்டேன்.

ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய போது அவர்களும் திருப்பி அனுப்பபடுவார்கள்''என்றார். 

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026