பொதுநலன் என்ற போர்வைக்குள் சிலரின் சுய இலாபம் : தடுமாறும் வடக்கு அரசியல்
நாட்டின் ஐந்து வருட தலையெழுத்தை திடீரென முளைக்கும் அரசியல்வாதிகள் நிர்ணயிப்பதற்கு இடமளிப்பது மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.
அந்தவகையில் தெற்கின் சிங்கள தலைமைகள் தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறிய விடயமாகும்.
காப்பான் போல வந்து கழுத்தறுத்து முடக்கப்பட்ட துரோகத்தின் வலியை தமிழருக்கு யாரும் கற்றுதர தேவையில்லை.
அன்றிலிருந்து இன்று மட்டும் அரசியல் என்ற போர்வைக்குள் முடக்கப்பட்ட சமூகத்தினாராக தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
அரசாங்க சேவை நிறுவனம்
தற்போதும் தமிழர் தாயகத்தில் தனியார் சேவை நிறுவனங்களை தாண்டி அரசாங்க சேவை நிறுவனங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகின்றது.
அதனை எதிர்த்து கேட்கும் குரல்களையும் அரச அதிகாரிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் தங்களுக்கு சார்பாக வளைத்தெடுக்கவும் அதனை அடியோடு அறுக்கவும் பல வழியில் முயற்சிக்கின்றனர்.
இலவசம் என்று வழங்கப்பட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு சூழலில் நாம் வாழ்ந்து வருகின்ற நிலையில் இதில் அரசியல் என்பது பெரும் பங்கு வகிக்கின்றது.
பொது நலனென கூறி இங்கு சுயலாபத்திற்காக பல நாடகங்களை அரங்கேற்றும் சிலருக்கு மத்தியில் மக்களின் வாழ்வாதாரம் தள்ளாடுகின்றது.
ஆகையால், வருகின்ற தேர்தல் என்பது தமிழ் சமூகத்திற்கு எதாவது ஒரு வகையில் மாற்றத்தை காண்பிப்பதாகவும் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கும் தலைமைத்துவமாகவும் இருக்க வேண்டும்.
எனவே இதனை கருத்தில் கொண்டு தலைமைத்துவத்தை தேர்தெடுப்பது தொடர்பில் மக்களின் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |