வைத்தியர் ஹேமந்த ஹேரத் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கொரோனா தொற்று உறுதியானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தடுப்பூசிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பான அறிவிப்பை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் வெளியிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த வகையில், நோயாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியதன் பின்னர், அது குறித்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறியப்படுத்த வேண்டும்.
நோயாளர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் முறை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுகாதார வைத்திய அதிகாரியினால் வழங்கப்படும் தினத்தில், குறித்த இடத்திற்கு சென்று, அவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
