ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
தென்னாபிரிக்காவில் காணப்படும் ஒமிக்ரான் வைரஸ் எனப்படும் கொவிட் வைரஸின் அண்மைய மாறுபாட்டில் சுமார் 30 பிறழ்வுகள் இருப்பதாக டொக்டர் சந்திமா ஜீவந்தர(jeewandara) தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அவதானமாக இருக்க வேண்டும் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகள் வெற்றியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் போதுமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸை அடையாளம் காண இலங்கையில் ஆய்வுகூட வசதிகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"இந்த ஒமிக்ரான் மாறுபாடு டெல்டா வகையை விட வேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இலங்கை அதனை தடுக்க நன்றாக தயாராக உள்ளது. இதற்கு பயப்படத் தேவையில்லை. Omicron நாட்டிற்குள் நுழைவதை முடிந்தவரை தாமதப்படுத்த வேண்டியது அவசியம். இலங்கைக்கு எந்தவொரு வகையினதும் வருகையை நிரந்தரமாக நிறுத்த முடியாது.
பூஸ்டர் தடுப்பூசி நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு பயப்பட தேவையில்லை. ஆனால் இந்த ஒமிக்ரான் மாறுபாட்டின் கடுமையான விளைவுகள் பற்றி இன்னும் உலகில் யாருக்கும் தெரியாது. சினோபார்ம் தடுப்பூசி இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 3 மாத த்தில் அதன் செயற்பாடு குறைவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. அத்தகைய சூழ்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி மிகவும் முக்கியமானது. பாதுகாப்பு உள்ளது. பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாமல் இருப்பது நல்ல யோசனையல்ல, குறிப்பாக பெரியவர்களுக்கு.
“இலங்கையில் இன்னும் பரவலாக காணப்படும் ஒரே வகை டெல்டா. அதில் இரண்டு வகைகளைப் பார்த்தோம். ஒமிக்ரான் மாறுபாட்டின் 30 பிறழ்வுகள் உள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க நிலை. இது தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் திறன் கொண்டது என்று ஊகிக்கப்படுகிறது. டெல்டா நோயாளிகள் கூட இந்த ஒமிக்ரானுக்கு ஆளாகியுள்ளனர். இதன் சரியான நடத்தை எதிர்காலத்தில் தெரியவரும்.
ஒரு PCR கூட இதைக் கண்டறியும் திறன் கொண்டது. அது நல்ல விஷயம்தான்” என்றார். தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸின் சமீபத்திய திரிபு வைரஸின் 5 வது வகையாகும்.