தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் நாடகம் அம்பலம் -வெளிப்படுத்திய சஜித்

Sajith Premadasa Government Of Sri Lanka Election
By Sumithiran Feb 13, 2023 07:01 PM GMT
Report

தபால் வாக்குப் பத்திரத்தை அச்சடிக்க பணம் ஒதுக்குவதில்லை என முடிவு செய்ததிலிருந்து மக்களின் இறையாண்மையை கொள்ளையடிக்கும் அரசின் புதிய நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக எதரிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்கள் ஆணையற்ற அரசாங்கம் தேர்தலை நடத்த பயந்துபோயுள்ளதோடு,இதன் காரணமாக தேர்தலை ஒத்திவைக்கும் சதிகள் இன்னும் முடிந்தபாடில்லை.22 ஆவது முறையாக தேர்தலை ஒத்திவைக்கும் மற்றொரு கோழைத்தனமான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அரசின் கூட்டு சதிகள் தோற்கடிப்பு

தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் நாடகம் அம்பலம் -வெளிப்படுத்திய சஜித் | Drama Of The Government To Postpone The Election

எவ்வாறாயினும்,தேர்தலை ஒத்திவைப்பதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான கூட்டுச் சதிகள் சட்டத்தின் முன் ஒவ்வொன்றாக தோற்கடிக்கப்பட்டன. தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரமமைந்த தேவைப்பாடு என்பதோடு, அதை மீற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் வலியுறுத்துகிறோம்.

தேர்தல்கள் ஒத்திவைப்பு தொடர்பாக ஓர் நாடாக நாம் பல இழிவான வரலாற்று நிகழ்வுகளைஅனுபவித்துள்ளோம் என்பதோடு,அந்த கருப்பு நிகழ்வுகளை மீண்டும் மேற்கொள்வதற்கான சகல வழிகளும் மூடப்பட வேண்டும்.

சட்டத்தின்முன் உச்சபட்ச தண்டனை

தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் நாடகம் அம்பலம் -வெளிப்படுத்திய சஜித் | Drama Of The Government To Postpone The Election

தேர்தலை ஒத்திவைக்க சதி செய்யும் அனைவருக்கும் எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து சட்டத்தின்முன் உச்சபட்ச தண்டனையை வழங்குவோம் என தெரிவித்து கொள்கிறோம்.

எனவே,மக்களின் ஜனநாயக உரிமைகளை கடுமையாக மீறும் வகையில் தேர்தலை ஒத்திவைப்பது அல்லது நடத்தாமல் இருப்பது போன்ற கோழைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து சக்திகளும் ஏனைய அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரு முகாமில் இணையவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இது இப்போதைக்கு தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும் என்பதோடு,பைத்தியக்கார அரசாங்கம் மக்களின் இறையாண்மையுடன் விளையாட அனுமதிக்கக் கூடாத தீர்க்கமான தருணம் வந்துவிட்டது என்பதையும்நினைவுபடுத்துகிறேன்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026