தாய் மற்றும் மகன் உயிரிழந்த பரிதாப சம்பவம்; பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய தாய்!
By Pakirathan
தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
தாயினால் விஷம் கொடுக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் தற்போது தாயும் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தின், லோலுவாகொட - தலாஹேன பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.
காரணம்
பல்வேறு இடங்களில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிலே குறித்த தாய் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷமருந்தி இருக்கலாம் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய் மற்றும் சிறுவன் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு சிறுமி கொழும்பு - சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்