யாழில் அரச பேருந்து ஒன்றின் சாரதி - நடத்துனர் மீது கொடூர தாக்குதல்
யாழில் (Jaffna) இருந்து சென்ற அரச பேருந்தொன்றின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் (17) பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அரச பேருந்து ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி சென்றுள்ளது.
தாக்குதல்
இதன்போது பொன்னாலை சந்தியில் குறித்த பேருந்தை வழிமறிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தனியார் பேருந்து சாரதி ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேரப் பிரச்சனை
நேரப் பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த அரச பேருந்தின் சாரதியும் மற்றும் நடத்துனரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட குறித்த தனியார் பேருந்து சாரதியை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 மணி நேரம் முன்
