மூடப்பட்ட தொடருந்து கடவையில் பேருந்தை செலுத்திய சாரதி அதிரடியாக கைது
நாவலப்பிட்டி, வரகாவ பகுதியில் உள்ள தொடருந்து கடவை மூடப்பட்டிருந்த நிலையில், ஆபத்தை கருத்திற்கொள்ளாமல் அதனூடாக பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியை நாவலப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி குறித்த பேருந்து கினிகத்தேன, லக்சபான பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில், பேருந்து வரகாவ தொடருந்து கடவைக்கு அருகில் பயணித்த போது தொடருந்து பாதுகாப்பு வாயில் மூடப்பட்டிருந்தது.
எனினும், பேருந்து சாரதி வலது பக்கமாக திரும்பி எதிர்திசையிலிருந்து வாகனங்கள் வரும் பாதை ஊடாக உள்ள சிறிய இடைவெளி வழியாக பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
காவல்துறையில் முறைப்பாடு
குறித்த வழியாக பேருந்து சென்ற சிறிது நேரத்தில், கண்டியிலிருந்து நாவலப்பிட்டிக்குச் செல்லும் பயணிகள் தொடருந்து சென்றுள்ளது.
இந்த சம்பவம் அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், தொடருந்து பாதுகாப்பு வாயிலில் இருந்த காவலர் சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி காவல்துயினருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.
அதன்படி, பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனினும், சந்தேக நபருக்கு எதிராக நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
