மாணவியை கொன்றவர் ஜப்பானுக்கு தப்பியோட்டம்
By Sumithiran
கந்தளாய், ராஜஎல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வானில் மோதி உயிரிழந்த நிலையில், வான் சாரதியை வெளிநாட்டுக்கு செல்ல உதவிய சந்தேக நபரின் மூத்த சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் திலிந்து சமரசிங்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கந்தளாய் ராஜஎல வீதியைச் சேர்ந்த சமிர மதுஷன் என்ற நபரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாணவி இறந்ததை அடுத்து
வான் மோதி பள்ளி மாணவி ஒருவர் இறந்ததை அடுத்து, அந்த வானை ஓட்டிச் சென்றவர் ஜப்பான் செல்ல மேற்குறித்த நபர் உதவியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தாயின் மரணத்திற்காக ஜப்பானில் இருந்து
சந்தேகத்திற்குரிய வான் சாரதி தனது தாயின் மரணத்திற்காக ஜப்பானில் இருந்து இந்த நாட்டிற்கு வந்துள்ளதாகவும், விபத்தின் பின்னர் அவர் ஜப்பானுக்கு திரும்புவதற்காக பாங்கொக்கிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி