பயணிகளை மயக்கமடைய வைத்து முச்சக்கர வண்டி சாரதி செய்த செயல்
முச்சக்கர வண்டியில் ஏறுபவர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் பானத்தைக் கொடுத்துவிட்டு, பின்னர் தங்க நகைகளை கொள்ளையாடித்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, புறக்கோட்டை காவல் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகளின் படி, சந்தேக நபர் இரண்டு பயணிகளை ஏமாற்றி சுமார் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கப் பொருட்களைத் கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
மாத்திரைகள் மற்றும் ஒரு பொடியைப் பயன்படுத்தி பானத்தைத் தயாரித்து, அதை முச்சக்கர வண்டியில் வைத்து, சரியான தருணத்திற்காகக் காத்திருந்து, பயணிகளுக்குக் குடிக்கக் கொடுத்து அவர் இந்தத் திருட்டுகளைச் செய்துள்ளார்.
இந்த நிலையில், திருடப்பட்ட தங்கப் பொருட்கள் மற்றும் தங்கப் பொருட்களை அடகு வைத்துப் பெற்ற அடமானப் பத்திரங்களையும் சந்தேக நபரிடமிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் புறக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
