மீண்டும் மொஸ்கோ மீது ஆளில்லா விமான தாக்குதல்(காணொளி)
நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள வணிக மைய கட்டடம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் அந்த கட்டடம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய டெலிகிராம் இணைய பதிவான பாசா இதனைத் தெரிவித்தது. மொஸ்கோ-சிட்டி வணிக மைய கட்டடங்களுக்கு வெகு தொலைவில் அல்லாமல் வெடிப்பு நிகழ்ந்ததாக பாசா தெரிவித்துள்ளது.
வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில வினாடிகளுக்கு முன்பு
வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில வினாடிகளுக்கு முன்பு ஆளில்லா விமானம் ஒன்று தலைக்கு மேல் பறப்பதை கண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
" இதேவேளை, மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் இது தொடர்பில் தெரிவிக்கையில், வான் பாதுகாப்புப் படைகள் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியதாகக் கூறினார்.இந்த ஆளில்லா விமான சிதைவுகள் எக்ஸ்போசென்டர் கட்டடம் அமைந்துள்ள பகுதியில் விழுந்தன.
ட்ரோன் சிதைவுகள்
"நேற்று இரவு, வான் பாதுகாப்புப் படைகள் மொஸ்கோவிற்குள் நுழைய முயன்ற ஆளில்லா வான்வழி விமானத்தை அழித்தன. எக்ஸ்போசென்டர் கட்டடம் அமைந்துள்ள பகுதியில் ட்ரோன் சிதைவுகள் விழுந்தன, ஆனால் கட்டடத்திற்கு குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை. உயிரிழப்புகள் எதுவும் இல்லை" என்று சோபியான் கூறினார்.