காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் : இஸ்ரேல் மீது கடும் குற்றச்சாட்டு

Israel World Gaza
By Shalini Balachandran May 02, 2025 08:31 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

காஸாவிற்கு (Gaza) உதவி பொருள்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்தியதாக அந்தப் பொருள்களைக் கொண்டுவந்த சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ஃப்ரீடம் ஃபிளோட்டிலா கூட்டணி என்ற அந்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

இந்தியா பதிலடி கொடுக்கும்..! அமெரிக்காவில் எதிரொலித்த குரல்

நிவாரணப் பொருள்

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிவாரணப் பொருள்களுடன் காஸாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘கான்ஷன்ஸ்’ கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

மால்டாவிற்கு அருகிலுள்ள சா்வதேச கடல் எல்லையில் அந்தக் கப்பல் இருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் : இஸ்ரேல் மீது கடும் குற்றச்சாட்டு | Drone Strike Hits Gaza Aid Ship

கப்பலின் மின் உற்பத்தி மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இதன் விளைவாக, கப்பலின் உடலில் பெரிய துளை ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த சேதத்தால் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதுடன் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம்தான் நடத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எதையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடரும் பதற்றமான நொடிகள் : காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்

தொடரும் பதற்றமான நொடிகள் : காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்

அவசர எச்சரிக்கை 

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, கப்பல் விடுத்த அவசர எச்சரிக்கை சமிஞையைக் கேட்டு அருகிலிருந்த இழுவைப் படகு ஒன்று உதவிக்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது கான்ஷன்ஸ் கப்பலில் 12 பணியாளா்கள் உள்பட 16 போ் இருந்தாகவும் அவா்கள் கப்பலை விட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் : இஸ்ரேல் மீது கடும் குற்றச்சாட்டு | Drone Strike Hits Gaza Aid Ship

தாக்குதல் காரணமாக கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், கப்பலில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாவும் யாரும் காயமடையவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2023 அக்டோபா் ஏழாம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து, 251 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதில் இருந்து ஹமாஸ் படையினரை ஒழித்துக்கட்டுவதாக காஸாவில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், போா் தொடங்கியதில் இருந்தே அந்தப் பகுதிக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பொருள்கள் செல்வதையும் தடுத்துவருகிறது.

உக்ரேனிய படைகளில் அமர்த்தப்படும் சிறார்கள் : புடின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

உக்ரேனிய படைகளில் அமர்த்தப்படும் சிறார்கள் : புடின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

மனிதாபிமான நெருக்கடி 

இதனால் இந்த 19 மாத கால போரில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் 52,000 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனா்கள் (பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்) உயிரிழந்த நிலையில், இஸ்ரேலின் இந்தத் தடையால் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அங்கு மனிதப் பேரழிவு ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்து வருகின்றது.

காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் : இஸ்ரேல் மீது கடும் குற்றச்சாட்டு | Drone Strike Hits Gaza Aid Ship

இந்தச் சூழலில், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போருக்கு முன்னரே, கடந்த 2010 இல் இஸ்ரேல் இராணுவத்தின் காஸா முற்றுகையை மீறி அந்தப் பகுதியை நோக்கிச் சென்ற மாவி மா்மரா என்ற கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஒன்பது பேரைக் கொன்றது நினைவுகூரத்தக்கது.

எனவே, தற்போது கான்ஷன்ஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதும் இஸ்ரேல் இராணுவமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்

ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024