பெரும் சிரமத்தில் சிக்கவிருக்கும் கனேடிய மக்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனடாவில் இவ்வருடம் குறைந்தளவு பனிப்பொழிவு மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக பெரும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்க நேரிடலாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடர்பில் விடயம் கனடிய உணவு விவசாய திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வழமைக்கு மாறான வறட்சி காரணமாக கடந்த வருடம் கனேடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வழமைக்கு மாறான வறட்சி
அத்தோடு, கூடிய வெப்பநிலை மற்றும் வரண்ட காலநிலை காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கனடாவில் கடந்த வருடம் 72 வீதமான பகுதிகளில் வழமைக்கு மாறாக வறட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
அதேவேளை, இந்த வறட்சியினால் கனடாவின் விவசாய நிலங்களே மிக அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே, கனேடிய மக்களுக்கு இவ்வருடமும் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |