லெபனான் நாட்டைவிட்டு வெளியேறுமாறு தனது மக்களுக்கு ஜேர்மன் வலியுறுத்து
லெபனான் நாட்டிலிருக்கும் தனது குடிமக்களை அந்நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு ஜேர்மனி வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், போர் லெபனானுக்கும் பரவலாம் என்ற காரணத்தினால் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் திகதி ஹமாஸ் துணை தலைவர் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் விமானத்தாக்குதலில் உயிரிழந்துள்ளதால், போர் லெபனான் நாட்டுக்கும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஜேர்மனி வலியுறுத்து
ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லெபனானிலிருக்கும் அனைத்து ஜேர்மன் குடிமக்களும், நெருக்கடி நேர அரசு பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, முடிந்தவரையில் விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேறவும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவித்தலுக்கு முன்னரே இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில், அக்டோபர் மாதத்தில், தன் குடிமக்கள் லெபனானுக்கு செல்வதற்கு எதிராக ஜேர்மனி எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |