ஹமாஸின் முக்கிய தலைவர் கொலை விவகாரம்! மீண்டும் உக்கிரமடையும் போர் பதற்றம்
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில், ஹமாஸ் துணை தலைவர் சலே அல் அரூரி பலியாகியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி, லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேருடன் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியது.
ஹமாஸ் குழுவின் துணை தலைவர்
லெபனான் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், இந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர்ப் பகுதியில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஒன்று வெடித்து சிதறியதாகவும் தகவல் தெரிவித்திருந்தது.
இந்த விடயம் தொடர்பாக, கருத்து தெரிவிக்க இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்துவிட்ட நிலையில், தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்ரேல் இருந்தால், இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் உக்கிரமடையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் உயிரிழந்ததாக தெரிவித்த சிறிது நேரத்திலேயே, பலஸ்தீனத்தின் ரமல்லாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அவரின் மரணத்திற்கு பலி வாங்குமாறு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சம் தொடும் போர் பதற்றம்
ஹமாஸ் குழுவின் துணை தலைவர் பலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மோத் அப்பாஸ் உடன் நல்லுறவு கொண்டிருந்ததுடன் போட்டி குழுக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் உயிரிழந்தது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அதேவேளை, லெபனானில் உள்ள பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் குறிவைத்தால் பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உறுதியளித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |