தண்டனை அறிவித்த பெண் நீதிபதி! ஆக்ரோசமடைந்த குற்றவாளியால் பரபரப்பு(காணொளி)
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் வழக்கு ஒன்றின் தீர்ப்பின் போது பெண் நீதிபதி மீது பிரதிவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று(03) இடம்பெற்றுள்ளது.
நீதிபதி மேரி கே. ஹோல்தஸ், 30 வயதான டெப்ரா ரெட்டனுக்கு மூன்று குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கும் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
தாக்குதல் காரணமாக மேரி கே ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாகவும், நீதிபதியின் உதவிக்கு வந்த நீதிமன்ற மார்ஷல் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Judge gets Attacked ? pic.twitter.com/yb4WNswYJq
— RealShit (@RealNowOffical) January 3, 2024
இந்நிலையில், தாக்குதலை நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் கிளார்க் கவுண்டி தடுப்பு மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |