பிரித்தானியாவிற்கு பேரிழப்பு: ஹவுதி தாக்குதலின் எதிரொலி
ஈரானிய ஆதரவு அமைப்பான ஹவுதிகளால் தாக்குதலுக்குள்ளனா பிரித்தானிய வர்த்தக கப்பலொன்று செங்கடலில் மூழ்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் Rubymar என்ற பிரித்தானிய சரக்கு கப்பல் ஹவுதி அமைப்பின் தாக்குதலுக்குள்ளானது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் Khor Fakkan பகுதியில் இருந்து பல்கேரியாவின் வர்ணா பகுதிக்கு புறப்பட்டு சென்ற போது Rubymar சரக்கு கப்பலானது தாக்கப்பட்டது.
கைவிடும் நிலைமை
எவ்வாறாயினும், தாக்குதலின் போது கப்பலில் இருந்த ஊழியர்களை பிரித்தானிய இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
ஆனாலும், தற்போது குறித்த கப்பலை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பிரித்தானியாவின் UKMTO அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கான காரணம்
இந்நிலையில், ஹவுதிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் Yahya Saree விடுத்த அறிக்கையில், Rubymar சரக்கு கப்பல் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஹவுதி அமைப்பு செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரெலுடன் தொடர்புடைய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |