மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள்! அமைச்சர் எடுத்த அதிரடி
மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை பரவுவதை தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து “விழிப்புணர்வு குழுக்களை” நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மேல்மாகாண பாடசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான குழுவொன்று உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பாடசாலைகளைச் சுற்றி அடிக்கடி சோதனை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,