போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை: தென்னிலங்கையில் பயங்கரம்
Sri Lanka Police
Galle
Sri Lanka Police Investigation
Western Province
Drugs
By Kathirpriya
காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பயங்கர சம்பவம் நேற்று (02) காலி - ஹிக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வைத்து அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர், குறித்த நபரின் தலையையும், இரண்டு கைகளையும், கால் ஒன்றையும் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்