கிலோக்கணக்கான கேரள கஞ்சாவுடன் கைதான நபர்கள்!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு மேற்கே உள்ள கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், சுமார் 283 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று (4) காலை இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
வடக்கு கடற்படை கட்டளை பிரிவினர், தமது கண்காணிப்பு நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அவதானித்தனர்.
19 - 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
அதில் ஆறு மூடைகளில் இருந்த 76 பொதிகளில் காணப்பட்ட சுமார் 283 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சாவை கடற்படை அதிகாரிகள் கைப்பற்றினர். இவற்றின் பெறுமதி சுமார் 93 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் - பேசாலை பிரதேசத்தை சேர்ந்த 19 - 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் படகுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
